எம்பிரான்
"ஸ்ரீமதே ராமானுஜாய நம"
* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
*எம்பிரான்! எம்பிரான்!*
எம்பிரான் ! எம்பிரான் !
எம்மை ஆளும் எம்பிரான்!
(2)
எண்ணில் அடங்கா பெருமைகள்....
எங்கெங்கும் நின் புகழ்....
(எம்பிரான்)
எத்திராசர் நின் அருள்....
என்றென்றும் வேண்டினோம்....
எண்ண முடியா ஆசைகள்....
எண்ணிடாமல் காத்தருள்....
(எம்பிரான்)
எட்டு எட்டாய் வாழ்வினை....
எளிமையாய் உணர்த்தினாய்....
எட்டு எழுத்து மந்திரத்தை .... எட்டுதிக்கும் பரப்பினாய்....
(2) எட்ட முடியா(த) மேன்மையை... எட்டவைப்பாய் எம்மையும்....
எண்ணித் துணிந்த கருமங்கள்....
எண்ணிய வண்ணம் தந்தருள்....
.... ஹேராம் ....